நாட்டு வெடிகுண்டு வெடித்து நாய் பலி

by Staff / 17-03-2023 01:52:58pm
நாட்டு வெடிகுண்டு வெடித்து நாய் பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை அடுத்த பெரியகீசகுப்பம் பகுதியில் காட்டு பன்றிகள் வைப்பதற்காக நாட்டு வெடிகுண்டுகளை சிலர் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பாலித்தீன் கவரில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தெரு நாய் கடித்தபோது வெடித்து நாய் தலை சிதறி பலியானது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் குமரன், தண்டபாணி உள்ளிட்டோர் அங்கிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இது குறித்து பொன்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் தலை சிதறி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories