ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதியை நேற்றிலிருந்து இழக்கிறார்.

by Admin / 24-03-2023 02:42:07pm
 ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதியை நேற்றிலிருந்து இழக்கிறார்.

வயநாடு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி என்கிற பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்று பாராளுமன்ற தேர்தலின் பொழுது பேசிய அவதூறு வழக்கின் காரணமாக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அவருக்கு தண்டனையை விதித்திருந்தது ஒரு மாத காலம் பிணை  வழங்கி ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம்உத்திரவிட்டிருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற செயலகம் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் என்கிறதகுதியை நேற்றிலிருந்து அவர் இழந்ததாகவும் அதன் காரணமாக அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக இன்று ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது  இதன் மூலம் ராகுல் காந்தி வரும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக  நிற்க வேண்டும் எனில், மேல்முறையீட்டின் அடிப்படையில் அவர் நிரபரவாதிதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் அவ்வாறு இல்லை எனில் அவர்  தேர்தலில்8ஆண்டுகள் போட்டியிடக் கூடிய தகுதியை இழப்பார். ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தியாவிவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தலைவர்களும்  போராட்டம் நிகழ்த்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு ஆனது இன்று வெளியிடப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via