பிரபல நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்

போஜ்புரி நடிகை அகன்ஷா துபே கடந்த 26-ம் தேதி வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அகன்ஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இரவில், அவருடன் சந்தீப் சிங் என்ற நபர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்தீப் சிங் சுமார் 17 நிமிடங்கள் அகன்ஷா அறையில் இருந்ததாக தெரிகிறது. அகன்ஷா தற்கொலை செய்து கொண்ட நாளில் இருந்து சந்தீப் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :