செவிலியர் உயிருடன் எரித்து கொலை: நெல்லையில் பரபரப்பு

தூத்துக்குடி, கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மனைவி அய்யம்மாள் (45). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் பிரிந்துவிட்டனர். இரண்டு மகன்கள் தாயுடனும், ஒரு மகன் தந்தையுடனும் வசிக்கின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அய்யம்மாள், மருத்துவமனை அருகே அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பிய அவர் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். கணவன் பாலசுப்பிரமணியன் கத்தியால் மனைவியை குத்தியும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளார். தொடர்ந்து, அவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Tags :