பொது சிவில் சட்டம் - மதுரை ஆதீனம் வரவேற்பு

by Staff / 09-07-2023 04:59:40pm
பொது சிவில் சட்டம் - மதுரை ஆதீனம் வரவேற்பு இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளது. இந்நிலையில், தற்போது காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், “இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. ஆன்மீகவாதிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் ஒரே பொது சிவில் சட்டம் என்பதை வரவேற்கிறேன். பொது சிவில் சட்டம் ஏற்புடையது. இந்த சட்டம் அனைவருக்கும் நல்லதுதான்” என தெரிவித்துள்ளார். மேலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via

More stories