விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓபுலவாரிபள்ளி மண்டலம் சின்னஓரம்பாடு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிராக்டர் மீது டாடா ஏஸ் கார் மோதியது. இந்த விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் நரசிம்மு (57), சங்கரம்மா (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். போயகொண்டா மதனப்பள்ளியில் உள்ள கங்கம்மா கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
Tags :