408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா

by Staff / 13-08-2023 03:01:25pm
408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா

பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன், எம். எல். ஏ. க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சேலம் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. அந்த வகையில் கல்வித்துறையில் இணைந்து தனியார் பள்ளிகளும் தங்களது பங்களிப்பை வழங்குவதால் இந்தியாவில் சிறப்பாக கல்வி கற்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உங்களை எல்லாம் அழைத்து வெளிப்படை தன்மையுடன் இங்கே அங்கீகார ஆணைகளை வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் கே. என். நேரு பேசினார்.

 

Tags :

Share via

More stories

Logo