அப்துல் கலாம் நினைவிடம் சென்ற முதல்வர் ஸ்டாலின்

by Staff / 18-08-2023 12:38:44pm
அப்துல் கலாம் நினைவிடம் சென்ற முதல்வர் ஸ்டாலின்

2 நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரத்தில், தென் மண்டல திமுக பிரமுகர்கள் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் பிரமாண்ட மீனவர் மாநாடு நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டிற்கு செல்லும் வழியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via

More stories