சென்னையில் ரவுடிகளை ஒழிக்க ஆபரேஷன்

by Editor / 25-07-2021 11:12:38am
சென்னையில் ரவுடிகளை ஒழிக்க ஆபரேஷன்

 சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துஇந்த பின்னணியில்தான் நேர்மைக்கும், தனது கடமை தவறாத பணிக்கும் பெயர்போன சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது ரவுடிகளுக்கும் தலைநகராக விளங்கும் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது.பொதுமக்களை அதிமாக அச்சுறுத்தும் ஏ பிரிவுகளில் உள்ள ரவுடிகள் முதலாவதாக DARE ஆபரேஷன் திட்டத்தின் கீழ் களையெடுக்கப்படுவார்கள். அடுத்ததாக பி பிரிவில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை தொடங்கும். நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக சுமார் 39 ரவுடிகள் உள்ளனர் என்றும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். DARE ஆபரேஷன் மூலம் சென்னையில் ரவுடிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று சங்கர் ஜிவால் நம்பிக்கை அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo