ஆண் குழந்தை பிறக்க மகள்களை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை

by Staff / 15-09-2023 01:24:35pm
ஆண் குழந்தை பிறக்க மகள்களை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை

பீகாரின் பக்சர் மாவட்டத்தில் இரண்டு மைனர் மகள்களை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆண் குழந்தை பிறக்க மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு மகள்களை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக மந்திரவாதி, சிறுமிகளின் தாய், அத்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012-இல் மந்திவாதியை சந்தித்து, இரண்டு மகள்கள் இருப்பதாகவும், மகன் பிறக்க என்ன செய்ய வேண்டும் என குற்றவாளி பரிகாரம் கேட்டுள்ளார். அதன்படி, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பெற்ற மகள்களையே பலாத்காரம் செய்துள்ளார். அதில் ஒரு மகளுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo