நடிகர் விஜய் வருமான வரித்துறை வழக்கு கால அவகாசம்

நடிகர் விஜய் கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த போது, புலி திரைப்படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாகவருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இவ் வழக்கு தொடர்பான வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Tags :