பணம் வைத்து சீட்டு ஆடிய 11 பேர் அதிரடியாக கைது.

by Staff / 16-11-2023 01:36:07pm
பணம் வைத்து சீட்டு ஆடிய 11 பேர் அதிரடியாக கைது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் தென்தாமரை குளம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கடேஷ் பொன்ராஜ் ஹரிதாஸ் அறிவழகன் உட்பட 11 பேர் பணம் வைத்து சீட்டு ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 11 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 36, 100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் இதைத் தொடர்ந்து 11 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.

 

Tags :

Share via
Logo