மன்சூர்அலிகானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்சங்கம் கண்டனம்

by Staff / 19-11-2023 02:51:43pm
மன்சூர்அலிகானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்சங்கம் கண்டனம்

த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும்.
எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ, அதே ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories