உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்- 10 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவிப்பு..

by Admin / 29-11-2023 08:34:28am
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்- 10  குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவிப்பு..

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு  - கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 10 பச்சிளம் குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவிப்பு..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று நேற்று  பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று  தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு நகர கழக செயலாளர் கருணாநிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 10 பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

 

 

Tags :

Share via