மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

by Staff / 19-12-2023 11:30:07am
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

கொரோனா வைரஸின் புதிய துணை வகையான JN1 மீண்டும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. பண்டிகை காலங்களில் கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories