சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து குழந்தை உட்பட ஐந்து பேர் பலி.

by Editor / 10-04-2024 07:32:36pm
 சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து குழந்தை உட்பட ஐந்து பேர் பலி.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய் புறத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய் புறத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் காரானது திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி சாலையை கடக்க முயன்றார். மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த கனகவேல் டூவீலர் மீது மோதாமல் இருக்க கட்டுப்படுத்த முயன்ற போது காரானது டூவீலர் மீது மோதி நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து உள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர் கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார். அதேபோல் காரில் வந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி உறவினர் நாகஜோதி மற்றும் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து குழந்தை உட்பட ஐந்து பேர் பலி.
 

Tags : மதுரை திருமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து குழந்தை உட்பட ஐந்து பேர் பலி.

Share via

More stories

Logo