தி.மு.கவை நேரடியாக எதிர்த்த விஜய் -சீமானுக்கு குட்டி கதை.

by Admin / 27-10-2024 07:10:15pm
தி.மு.கவை நேரடியாக எதிர்த்த விஜய் -சீமானுக்கு குட்டி கதை.

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழ் தாய் வாழ்த்தோடு தொடங்கியது.. வரவேற்பு உரை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ் சி ஆனந்த் நிகழ்த்தினார்.. அடுத்து கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் தெளிவு படுத்தினார் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராம் மற்றும் துணை பொதுச்செயலாளர் செயல்திட்டவிளக்கங்களை கூறினர். அடுத்து கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் எதார்த்தமாக தன்னுடைய உரையை தொடங்கினார். அவ்வுரையில் தங்களுடைய

அரசியல் எதிரியாக, திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியை அகற்றுவது என்கிற மாதிரியாக திமுகவை நேரடியாக எடுத்ததோடு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியையும் பெரியார் கொள்கையின் அடிப்படையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் முதலைகள் நிரம்பிய குளம் என்று சொல்லியிருந்தார். அதற்கும் விஜய் ஒரு குட்டி கதையை சொல்லி அவருக்கான பதிலையும் அளித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்கிற திருக்குறள் கருத்தை அடிப்படையாக அடிப்படையாக கொண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் வலியுறுத்தியதோடு பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையைத் தவிர.. ஜாதி, மத, சமூக சீர்திருத்தங்களை, பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும் காமராஜரைபின்பற்றி நேர்மையான தூய்மையான ஆட்சியை அமைக்கப்போவதாகவும் அம்பேத்காரின் சமூக நீதி அனைவருக்கும் சம  உரிமைகளை சட்ட வழியாக பெற்றுத் தருவதற்கான அவர் கொள்கையையும் பின்பற்றுவதாகவும் கணவனை இழந்தாலும் சோர்ந்து போகாமல் சிவகங்கைச் சீமையை தனி ஒரு பெண்ணாக நின்று ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்டு களம் ஆடிய வேலு நாச்சியாரையும் முன்னேறும் சமூகத்தில் இருந்து வந்த அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்டத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதோடு சிறையில் கர்ப்பிணியாக இருந்தும் 14 நாட்கள் பரோலில் விடுப்பு பெற்று குழந்தையை பெற்று பின்னர் சிறைக்குச் சென்ற வீராங்கனை அஞ்சலை அம்மாள் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்த சமூகத்திற்கு பாடுபட்ட அவரையும் ஐந்து பேரையும் தலைவர்களாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் இயங்குவதாகவும் தன்னை கூத்தாடி என்று கேலி பேசியவர்களுக்கு எம்ஜிஆர்,என்.டி.ஆர் கூத்தாடிகளாக இருந்து நல்ல தலைவர்களாக இன்றைக்கும் மக்களால் மதிக்கப்படுகின்ற முதலமைச்சர் ஆக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வழியில் நானும் என்கிற மாதிரியான கருத்துக்களை வெளியிட்டதோடு கல்வி வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் அனைவருக்கும் சமமான விகிதாச்சார அடிப்படையில் கல்வியும் வேலைவாய்ப்பும் சுகாதாரமும் குடிநீரும் கிடைப்பதற்கான ஒரு ஆட்சியை அமைக்க உள்ளதாகவும் இரு மொழி கொள்கையை-தமிழை ஆட்சி மொழியாகவும் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்டு சிறந்ததொரு நிர்வாகத்தை உருவாக்குவதோடு ஊழலற்ற ஒரு ஆட்சியை நிறுவுவது தான் தன்னுடைய கொள்கை என்றும் தெரிவித் தோடு தம் கொடிக்கான விளக்கத்தை காணொளி காட்சி வழியாகவும் அவருடைய குரலில் ஒளிபரப்பப்பட்ட கொள்கை விளக்கம் வழியாக அது தங்களுடைய நிலைப்பாடு என்பதை நிறுவினார்.

பெண்களுக்கு சம வாய்ப்பு அளிப்பதற்கு தன்னுடைய கட்சி உறுதி கொண்டு உள்ளதாகவும் தங்கள் கட்சியை விசில் அடிச்சான்கு ஞ்சி போன்று நினைத்து விடாதீர்கள் .இங்கே இருக்கிற கூட்டம் மட்டுமல்ல இதைத் தாண்டி மற்ற மாநிலங்களில் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருந்து தமக்கு வாய்ப்பு அளிப்பதற்கான மக்கள் இருக்கிறார்கள் என்றும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட்டு அரசியல் நடத்தி செல்லக்கூடியவன் நான் அன்று என்றும் இது மாற்று அரசியல் இல்லை.. மாற்றத்திற்கான அரசியலும் இல்லை.. மக்களுக்கான அரசியல்- மக்களோடு மக்களாக இருந்து மக்களினுடைய அடிப்படை தேவையான சோறு, வீடு, வேலை இவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றி கழகத்தினுடைய நோக்கம் என்றும் வைரஸ் ஆக பரவி கிடக்கின்ற ஊழலை முடிந்த அளவு ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

என் தங்கையை இழந்த போது எப்படி வேதனை அடைந்தேனோ.. அதேபோன்று தங்கை அனிதா நீட் தேர்வால்படிக்க முடியாமல்இறந்து போனது என்னை மிகவும் பாதித்தது. அதனால் நீட்டை முழுமையாக எதிர்க்க உள்ளதாகவும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலுவாக எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 அத்துடன் தங்கள் கட்சியோடு இணைந்து பணியாற்ற வருகிறவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் தெரிவித்தார்.

 

தி.மு.கவை நேரடியாக எதிர்த்த விஜய் -சீமானுக்கு குட்டி கதை.
 

Tags :

Share via