2004 முதல் 2014 வரை ஆட்சியிலும்,அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம்-செல்வ பெருந்தகை 

by Editor / 19-11-2024 11:10:47am
 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும்,அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம்-செல்வ பெருந்தகை 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்;

 காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும்,அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம்.இதுகாங்கிரஸ் ஃபார்முலா. ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். .அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியா ஆரம்பிக்கலாம்,இயக்க ஆரம்பிக்கலாம்.அவரது கருத்தை சொல்லலாம் அதற்கு எதற்கும் சம்பந்தமில்லை.
 பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டு தான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும்  ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார் ஏன் மணிப்புருக்கு மட்டும் செல்லவில்லை.இது மர்மமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :  2004 முதல் 2014 வரை ஆட்சியிலும்,அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம்-செல்வ பெருந்தகை 

Share via