மூன்று நாட்களுக்கு கனிம வளவாகனங்களை நிறுத்தி வைக்க ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை.

by Editor / 23-12-2024 11:28:32pm
மூன்று நாட்களுக்கு கனிம வளவாகனங்களை நிறுத்தி வைக்க ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் டிரைவர் சொசைட்டி என்கின்ற அமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை திங்கள் கிழமை இரவு 8 மணி அளவில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அந்த கோரிக்கை மனுவில் 24, 25, 26, ஆகிய மூன்று தினங்களில் கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் காலம் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் முதல் சபரிமலை வரை உள்ள ஐயப்பன் ஆலயங்களில் நடைபெற உள்ளது, இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வாகனங்களில் வந்து குவிவது வழக்கமாக இருந்து வருகிறது, அதன் காரணமாக மேற்கண்ட 3 தினங்களில் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளா வரும் 800 க்கும் மேற்பட்ட கனிம வள வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கு முழுமையாக தங்களது ஓட்டுநர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அந்த மனுவில் அந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : மூன்று நாட்களுக்கு கனிம வளவாகனங்களை நிறுத்தி வைக்க ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை.

Share via