சுற்றுலா வந்த கேரளா தம்பதியினர் கார் கவிழ்ந்தது.

by Editor / 25-12-2024 09:36:11pm
சுற்றுலா வந்த கேரளா தம்பதியினர் கார் கவிழ்ந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை க்கு தற்போது பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரளா மாநில பட்டாம்பி அடுத்துள்ள குட்டநாடு பகுதியை சேர்ந்த சைனுதீன் அவரது மனைவி ஆசீனா மற்றும் அவர்களது 4 குழந்தைகளுடன் வால்பாறை பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நீரார்அணைக்கு செல்லும் வழியில்.. சிறுகுன்றா இடைச்சோலை அருகில் எதிரே வந்த காருக்கு வழிஒதுங்கும்போது எதிர்பாராத விதமாக கார் கல்லின் மீதுஏறி நிலைதடுமாறி 10 அடி பள்ளத்தில்  அந்தரத்தில் தலைகுப்பராக தொங்கியது..அந்தவழியாக வந்த சுற்றுலா பயணிகளும்  மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் காரில் இருந்தவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது,.சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : சுற்றுலா வந்த கேரளா தம்பதியினர் கார் கவிழ்ந்தது.

Share via