4 ஆண்டுகளில் 3வதுமுறை தேர்தலை சந்திக்கும் ஈரோடு  கிழக்கு தெகுதி.

by Editor / 07-01-2025 03:31:21pm
4 ஆண்டுகளில் 3வதுமுறை தேர்தலை சந்திக்கும் ஈரோடு  கிழக்கு தெகுதி.

ஈரோடு கிழக்கு தெகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா வென்று MLAவானார். ஆனால் அவர் 2023 ஜனவரியில் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் கண்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 4 ஆண்டுகளில் 3 வதுமுறையாக பிப்ரவரி 5-ந் தேதிதேர்தல் நடைபெறுகிறது.
 

 

Tags : 4 ஆண்டுகளில் 3வதுமுறை தேர்தலை சந்திக்கும் ஈரோடு  கிழக்கு தெகுதி.

Share via