மத்திய பட்ஜெட் - திமுக கண்டன பொதுக்கூட்டம்

by Staff / 03-02-2025 03:56:43pm
மத்திய பட்ஜெட் - திமுக கண்டன பொதுக்கூட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 8ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்ஜெட்டில் ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப். 8ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் அனைத்துக் மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via