செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

கோவையை சேர்ந்த கீதாரமணி (56) என்பவரிடம் இரண்டு பெண்கள் 4.5 சவரன் தாலி செயினை பறித்து அங்கிருந்து தப்பமுயன்றுள்ளனர். அப்போது கீதாரமணியின் கணவர் மற்றும் மகன் இருவரும் சேர்ந்து அந்த இரண்டு பெண்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, 37, அபிராமி, 36, என விசாரணையில் தெரிய வந்தது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Tags :