விஜய்க்கான கூட்டணி கதவையும் மூடினேன். விசிக தலைவர் திருமாவளவன்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவிற்கு தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள். பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. அவர்கள் இருக்கும் கூட்டணியுடனும் சேரமாட்டோம். இதனால் என்ன பாதிப்பு வந்தாலும் I Don't Care. அதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். பதவிதான் முக்கியம் என்றால் இப்படி பேசமுடியுமா?
இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய், புத்தக வெளியீட்டு விழாவிற்கு விகடன் குழுமம் சார்பில் அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன். 'அவருடைய மனது நம்முடன் இருக்கும்' என்று அப்போது விஜய் கூறினார்'. நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.
Tags : விஜய்க்கான கூட்டணி கதவையும் மூடினேன். விசிக தலைவர் திருமாவளவன்.