கூட்டணி ஆட்சி: அமித்ஷா சொல்வதே வேதவாக்கு - எல்.முருகன்
அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் எங்கள் வேத வாக்கு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது" என்று கூறியுள்ளார்.
Tags :



















