வைகை அணையில் இருந்து பெரியார் ஒரு போக பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு.

by Staff / 18-09-2025 09:43:40am
வைகை அணையில் இருந்து பெரியார் ஒரு போக பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு.

தேனி மாவட்டம் பெரியாறு பாசன பகுதியில் உள்ள 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்கள் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் விவசாய நிலங்கள் என 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஒரு போக பாசனம் வசதிக்காக 1130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு தண்ணீர் இருப்பதை பொறுத்து என 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.இந்த தண்ணீரை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தேனி மதுரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தனர்.

 

Tags : வைகை அணை

Share via