தமிழக வெற்றி கழகத்தினர் 4 பேர் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 20 ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொள்ள வந்த பொழுது அழகிரி காலனி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் மற்றும் நிர்வாகிகள் மனோ, அன்பு மற்றும் கிரேன் இயந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் மற்றும் தவெக உறுப்பினர்கள் மனோ, அன்பு ஆகிய மூன்று பேரும் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
Tags : தமிழக வெற்றி கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்*.



















