பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோஸ் ஷோக்களுக்கான நிலையான செயல்பட்டு நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

by Admin / 06-01-2026 11:50:40pm
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோஸ் ஷோக்களுக்கான நிலையான செயல்பட்டு நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோஸ் ஷோக்களுக்கான நிலையான செயல்பட்டு நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தின் பொழுது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் 16 முக்கிய நிபந்தனைகளுடன் அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது . நிகழ்ச்சிக்கு முன்னதாக காவல் நிலையத்திலோ அல்லது துணை பிரிவு காவல் அதிகாரியிடமோ விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் இதில் நிகழ்ச்சி இடம் தேதி நேரம் எதிர்பார்க்கப்படும் கூட்டம் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் நியமிக்கப்பட்ட இடத்தின் கொள்ளளவு மீறி கூட்டம் கூடினால் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பொது பாதைகள் தேசிய மாநில நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்பட்டால் சாலை பராமரிப்பவரின் அனுமதி பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு இடத்தில் அதிகபட்ச கூட்ட கொள்ளளவை பொதுப்பணித்துறை மதிப்பிட வேண்டும் என்றும் அரசு வாகனங்கள், விமானங்கள் ,பணியாளர்கள் மற்றும் அரசு தங்குமிடங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் பொது இடங்கள் மற்றும் வசதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சம அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களை தேர்தல் பிரச்சாரத்துடன் இணைக்க கூடாது என்றும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகள் பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள், போராட்டங்கள், கலாச்சாரம் மற்றும் மத நிகழ்வுகள் என அனைத்திற்கும் பொருந்தும் என்றும் இந்த நெறிமுறைகள் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 100 பங்கேற்பாளர்களுக்கும் ஒரு தன்னார்வலர் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் நியமிக்கப்பட வேண்டும்.

குறைந்த ஆபத்துள்ள நிகழ்வுகளுக்கு 200 பேருக்கு ஒரு காவலர் வீதமும், அதிக ஆபத்துள்ள நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு ஒரு காவலர் வீதமும் பணியமர்த்தப்படுவர்.

நிகழ்வு நடக்கும் இடங்களிலும், செல்லும் வழிகளிலும் போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும். 

 500 பேருக்கு  ஆண்,பெண் தனித்தனியாக ஒரு கழிப்பறை மற்றும் ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்.

முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியான பாதுகாப்புப் பகுதி ஒதுக்கப்பட வேண்டும்.

 மேடை மற்றும் தடுப்புகளின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம் சான்றிதழ் பெற்று, நிகழ்ச்சிக்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். 

 

Tags :

Share via

More stories