அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேலூர் கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி மோகன் காந்திக்கு ஆதரவாக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கே. வி. குப்பம் பகுதியில் காலை நடைபெறும் மேற்கொண்ட முதலமைச்சராக அங்கிருந்து தேநீர் கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். இந்நிலையில்,பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி திடீரென்று அங்கு வந்த அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். இந்த பரப்புரையின் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பிரச்சாரத்திற்கு இடையே கே.வி குப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags :



















