பாத்திரத்தை படகாக மாற்றி திருமணம் நடத்திய தம்பதி

by Editor / 18-10-2021 06:59:15pm
பாத்திரத்தை படகாக மாற்றி திருமணம் நடத்திய தம்பதி

 

கேரளத்தில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர,மற்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்தமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.


இந்நிலையில், வெள்ளநீர் சுற்றிலும் சூழ்ந்திருக்க பெரிய பாத்திரத்தை படகு போல் மாற்றி அதில் அமர்ந்தபடியே திருமணம் நடைபெறும் இடத்தை சென்றடைந்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ்- ஐஸ்வர்யா ஆகிய தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திங்கள்கிழமை  திருமணம் நடைபெறவிருந்த சூழலில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டது. இதையடுத்து பெரிய பாத்திரத்தை படகாக மாற்றி தங்கள் திருமணத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் அந்த தம்பதி. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

 

Tags :

Share via