அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

by Editor / 22-10-2021 07:10:24pm
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது



மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பெரும்பாலான மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்களாக அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். அதேபோல், மாவட்ட கவுன்சிலர்களாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் உள்ளனர்.

இச்சூழலில் கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்தனர். அதேபோல், இரு கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்களும் வாக்களிப்பதற்காக வந்தனர். மேலும் இரு தரப்பு தொண்டர்களும் அதிகரவில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், தேர்தல் ஒத்திவைப்பதற்குக் காரணம் என்ன என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 500- க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags :

Share via