சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

by Editor / 24-11-2021 12:14:15pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

கனமழை வாய்ப்பு .
வரும் வியாழன் முதல்  செவ்வாய்க் கிழமை வரை (25 நவம்பர் முதல் 30 )அடை மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் நிகர கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்வு நிதியாக 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும்,
வெள்ள, சேத பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது,
உட்கட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக கூட்டத்தில் ஆலோசனை.

மதுரை: நியாயவிலை கடைகளில் தரமான அரிசியை விநியோகிக்க வேண்டும்”--முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

“அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்த தரமற்ற நெல் காரணமாகவே அரிசி தரமற்றதாக இருக்கிறது”-
அமைச்சர் மூர்த்தி.


அப்பல்லோ வழக்கு தொடங்கியது:
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை எல்லாம் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது: அப்பல்லோ
எங்கள் வாதங்களை முழுதாக மேற்கொள்ளவில்லை, எனவே அப்பல்லோ குறுகிடுவதை தடுக்க வேண்டும்: ஆறுமுகசாமி ஆணையம்.

மது போதையில் தொலைக்காட்சி நிருபரின் காரை உடைத்து , அவரை தாக்கிய சம்பவத்தில் பிரபல மேஜிக் நிபுணர் வசந்த் மீது #Coimbatore  காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு வசந்தை கைது செய்ய பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தல்.


சென்னை, தலைமை செயலகத்தில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழு முதல்வருடன் சந்திப்பு தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வெள்ள பாதிப்பை ஆய்வு மேற்கொண்ட நிலையில் முதல்வருடன் சந்திப்பு

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் குடிநீரில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது - குடிநீர் வாரியம்.


 

 

Tags :

Share via