கடலில் மிதந்துவந்த பார்சலில் இருந்த ஹெராயின் விற்பனை 6பேர் கைது.
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற அந்தோணி என்ற மீனவர் மினிக்காய் தீவு அருகே மிதந்து வந்த பார்சலை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்து வந்து பார்த்த போது 30 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.அதனை அவர் அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான், அந்தோனிமுத்து, பிரேம், கசாலி, ஆகிய நபர்களிடம் விற்பனை செய்துள்ளார்.இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது காவல்துறைக்கு கிடைத்ததைத்தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார் மாநகரப் பகுதியில் நடத்திய சோதனையில் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் வைத்திருந்த 6 பேர் கைது செய்தனர்.
தற்போது விற்பனைக்காக கும்பலிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது மேலும் இதுவரை 6.5 கிலோ விற்பனை செய்து உள்ளனர். இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி. ஜெயக்குமார். தெரிவித்தார்
Tags :