பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

by Staff / 25-03-2022 11:55:01am
 பாலியல்  வன்கொடுமை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கேட்டை அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

சிவகங்கை சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்.இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கூலி வேலைக்கு புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றாவளி தாமரை செல்வனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்

 

Tags :

Share via
Logo