தமிழகம் முழுதும் தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

by Editor / 04-04-2022 03:54:22pm
தமிழகம் முழுதும் தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து தி.மு.க., கொள்கை பரப்பு செயலர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : 

தி.மு.க., அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 77 மாவட்டங்களில், வரும் 9, 10ம் ஆகிய தேதிகளில்  பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.என்றும் வரும் 10ம் தேதி செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்; 9ம் தேதி கிருஷ்ணகிரியில் பொதுச் செயலர் துரைமுருகன்; கும்பகோணத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு; ராயபுரத்தில் மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்களில் பங்கேற்பர். என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo