கேரளாவுக்கு மணல் கடத்தல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது.

by Editor / 10-04-2022 07:30:39pm
கேரளாவுக்கு மணல் கடத்தல் கனிமவளத்துறை உதவி இயக்குனர்  கைது.

 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட பிஷப்க்கு சொந்தமான எம் சாண்ட் நிறுவனம் மூலமாக சுத்தமான மணல் எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதனை ஆய்வு செய்த அப்போதைய சப் கலெக்டர் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான ஆற்றுமணல் கேரளாவிற்கு கடத்தியதாக குற்றம் சாட்டி 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா வை சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர். 

சிபி சிஐடி போலீசாரின் தொடர் விசாரணையில், அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றிய சபியா மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததை உறுதி செய்து தற்போது சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Tags :

Share via