மீண்டும் பழைய ஒய்வூதியம் -அரசு பாிசீலனை

by Admin / 17-04-2022 07:15:10pm
மீண்டும் பழைய ஒய்வூதியம் -அரசு பாிசீலனை

இந்தியாவெங்கும் பழைய ஓய்வூதியத்திட்டம்2003 ஆண்டு ரத்து செய்யப்பட்டு,புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்கொண்டு வரப்பட்டது.இத்திட்டம் 2003 ஏப்ரல்1 லிருந்து தமிழ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.இப்பங்களிப்பு ஓய்வூதியப்படி 2003 ஏப்ரலுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்  அடிப்படை   சம்பளத்திலிருந்து பத்து விழுக்காடு பிடிக்கப்படும்.அதே அளவு தொகையை அரசு பங்களிப்பாக   வழங்கும்.இரண்டு தொகையும் அரசு முதலீடு செய்யும்.அவ்வூழியர் ஓய்வு பெறும்பொழுது ஊழியரிடம் பிடித்த   தொகை அரசு வழங்கும் தொகை .இதற்கான குறிப்பிட்ட வட்டி பெறப்பட்டு ,அரசு ஊழியரிடம் வழங்கும் முன்பு ஒரு அக்ரிமெண்டில்,இனி அரசிடமிருந்து எந்தவிதமான ஓய்வூதியம் குறித்தும் கேட்க மாட்டேன் என்று  கையெழுத்திட்டுதர வேண்டும்  .அதற்குப் பிறகு அவருக்கான தொகை அளிக்கப்படும். தொகை பெறப்பட்ட பின்பு அந்த அரசுஊழியருக்கு எந்தவிதமானதொகையும் அரசு அளிக்காது.அவர்பெற்ற தொகையோடு அவர்  வெளியேறிவிடுவார்.ஆனால்,பழைய ஒய்வூதியம் வருடத்திற்கு இரண்டு அகவிலைபடி,வருட இன்கிரிமெண்ட் என்று அவர் உயிரோடு இருக்கிறவரைக்கும்வழங்கப்படும்.அவர் இறந்த பின்பு அவர் துணைவியார் பாதி தொகை ஓய்வூதியமாகப்பெறுவார் இந்நிலையில்,பங்களிப்புஒய்வூதியத்தை ரத்து செய்து,மீண்டும் பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்துவதுதொடர்பாக வல்லுனர் குழு அளித்த பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளதாகவும் தமிழக அரசு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து உரிய முடிவை மேற்கொண்டு அரசாணைவெளியிடும் என்று தெரிவித்துள்ளது.இவ்அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Tags :

Share via