சாபமிட்டபெண் சாமியார் மிளகாய் பொடி அபிஷேகம்...

தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவற்காக அதிகாரிகள் சென்றனர். அதனை அறிந்து அப்பகுதியினர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது, உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோபத்தோடு சாபம் விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்து தெறித்து ஓடினர். பின்னர், அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
Tags :