நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறி இருப்பது உறுதி
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :