யுபிஐ செயலிகள் பண பரிமாற்றம் வரம்பு

by Editor / 13-12-2022 10:11:37pm
யுபிஐ செயலிகள் பண பரிமாற்றம் வரம்பு

கூகுள் பே, போன் பே, அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிமாற்றம் செய்யலாம் என்ற வரம்பு குறித்த தகவலை NPCI வெளியிட்டுள்ளது. இதன்படி அமேசான் ஒருநாளை ரூ.1 லட்சம் வரையிலான பணம் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் அமேசான் பே-ல் இணைந்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூ.5000 மட்டுமே அனுப்ப முடியும்.

கூகுள் பே செயலியிலும் ரூ.1 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம். ஆனால் ஒருநாளை 10 முறைக்கு மேல் கூகுள் பேயில் பணம் அனுப்ப முடியாது.பேடிஎம் செயலியில் ஒருநாளைக்கு ரூ.1 லட்சம் பண பரிவர்த்தனை செய்யலாம். ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 வரை பரிமாற்றம் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 5 முறையும், ஒரு நாளைக்கு 20 முறையும் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.போன்பேயிலும் நீங்கள் ரூ.1 லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யமுடியும்.

 

Tags :

Share via

More stories