சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து பாலியல் தொழில்- பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது

by Editor / 19-12-2022 02:52:02pm
சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து பாலியல் தொழில்- பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது

சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் சங்கரன்கோவில் சண்முகா நகர் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வரவழைத்து புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழில் செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் .இந்நிலையில் காவல்துறையினர்  , பெண் காவலர்களுடன் சென்று அந்த சொகுசு பங்ளாவில் அதிரடியாக சோதனை மேற்க்கொண்டனர். அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது  இதனை தொடர்ந்து அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த மகேஸ்வரி, சங்கரன்கோவில் சங்கு புரம் 4ம் தெருவை சேர்ந்த சுதாகர் மற்றும் வாசுதேவநல்லூர் கோட்டையூர் பகுதியை சேர்ந்த மாரித்துரை உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர் .குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் சொகுசு பங்களா எடுத்து பாலியல் தொழில் செய்து வந்தது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து பாலியல் தொழில்- பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது
 

Tags :

Share via

More stories