எரிவாயு கசிவு ஏற்பட்டு 9 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில், 9 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :