செல்போனில் சார்ஜ் போடும் போது சிறுமி உயிரிழப்பு

by Staff / 05-06-2023 02:45:08pm
செல்போனில் சார்ஜ் போடும் போது சிறுமி உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. செல்போனை சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார். சைதாபூர் கிராமத்தில் மான்சி என்ற சிறுமி செல்போனை சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது. சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கேரளாவின் திருச்சூரில் சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories