தமிழகத்தில் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் தக்காளியின் விலை கிலோ ரூ.100ஐ தாண்டியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் விலை குறையும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக பிரச்சனை மட்டுமே. விரைவில் விலைகுறையும். இது ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் நடக்கும் என, நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோஹித் குமார் சின்ஹா கூறினார். இந்த நிலையில் தமிழகத்திலுள்ள பசுமை அங்காடிகளில் 60 ரூபாய்க்கு தக்காளி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :