அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரிசி அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தோரில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே ரூ.1,000 தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கடந்த 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சம் பேருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :