கேசிஆர் மகள் கவிதாவிற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

by Staff / 15-04-2024 12:45:03pm
கேசிஆர் மகள் கவிதாவிற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிதா, கடந்த மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வழக்கில் கவிதாவும் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, மார்ச் 21ஆம் தேதி இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்தது.

 

Tags :

Share via