சாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமர் புரிவோம்

by Staff / 15-06-2024 03:50:04pm
சாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமர் புரிவோம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியினர் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் அக்கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் நேற்று (ஜூன் 14) அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஐந்து பெண்கள் உள்ளிட்ட 13 பேரை போலீசார் இன்று (ஜூன் 15) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் வாசுகி உமாநாத், தனது எக்ஸ் பக்கத்தில், “சாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமர் புரிவோம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo