அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பினார் ,முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்.

by Admin / 14-09-2024 10:14:32am
அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பினார் ,முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்.

 

கடந்த மாதம் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின்   சான் பிரான்சிகோ ,லாஸ்ஏஞ்சல்ஸ், சிகாகோ ,கூகுள்  நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டங்களை நிகழ்த்தி முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நிகழ்வுகளையும் பங்கேற்றார். இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து இன்று காலை சென்னை திரும்பியவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். ஆந்திரா முதலமைச்சர் 25,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஏத்ததாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சரின் பயணத்தில் அந்த அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை என்று பா.ம.க நிறுவன பேசியதாகவும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் திருமாவளவன் மது ஒழிப்பிற்கு எதிராக நடத்தக்கூடிய மாநாட்டில் அதிமுக அழைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கும் இது அரசியல் மாநாடு அன்று மது ஒழிப்பு மாநாடு இதில் எந்த கட்சியும் கலந்து கொள்ளலாம் என்று திருமாவளவனே தெளிவுபடுத்திய பின்பு அது குறித்து அவர் விளக்கமே போதுமானது என்றும் கோவை ஜி.எஸ்.டி கலந்துரையாடலில் அன்னபூரண ஹோட்டல் உரிமையாளரை மத்திய நிதியமைச்சரிடம் மன்னிப்பு கூறியது குறித்து கேட்டதற்கு நாடே அதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பதில் அளித்தார்.மீண்டும் போா்டு நிறுவனம் தமிழகம் வரவுள்ளதாகவும் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வியோடு  திமுக 75-வது ஆண்டுவிழா வரவுள்ளது. தி.மு.க சொன்னதை செய்யக்கூடிய கட்சி என்றும் தெரிவித்தாா்.. பல்வேறு நிறுவனங்களினுடைய முதலீடுகள் வழியாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதை நீங்கள் போகப் போக பார்ப்பீர்கள் என்பதாக அவர் பதில் உரைத்தார்.

 

Tags :

Share via