இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் லெபனானில்1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்
ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் லெபனானில் மிக மோசமான நெருக்கடி உருவாகியுள்ளது. இதன் காரணமாக 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர். லெபனானின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தற்போது இடம் பெயர்ந்து உள்ளனர் இவர்களில் சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு லெபனான் பெட் கா பள்ளத்தாக்கு மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களில் இஸ்ரேல் தீவிர வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இடம்பெயர்ந்த மக்கள் பள்ளிகள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் மட்டுமே முறையான தங்குமிடங்களில் உள்ளனர் மற்றவர்கள் வீதிகளிலும் வாகனங்களிலும் தங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது மார்ச் இரண்டாம் தேதி முதல் தொடங்கிய இந்த தாக்குதல்களில் இதுவரை 1280 க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் பாதுகாப்பு கருவி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் லெபனான் உடைந்து சுக்குநோர் ஆகி போகும் நிலையில் இருப்பதாகவும் உடனடியாக மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து உள்ளது.
Tags :













.jpg)





