பூமியைத் தாக்கும் ராட்சத விண்கல் - இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை
பூமியை ராட்சத விண்கல் தாக்கும் அபாயம் உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் எச்சரித்துள்ளார். உலக விண்கல் தின நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் பேசிய சோம்நாத், "அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும் அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை" என கூறியுள்ளார்.
Tags :